×

இடைப்பாடிைய சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிரில் பூஞ்சை காளான் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

இடைப்பாடி, ஜன.26: இடைப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் நெற்பயிரில் பூஞ்சை காளான் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி,  இடைப்பாடி அருகே பூலாம்பட்டி குப்பனூர் தெற்கத்தி காடு, வன்னியர் நகர், மூலபாறை, ஆசனூர்,  மூலபாதை, தேவூர், ஒடசக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகளவில், தனிஷ்கா அம்மன், ஆந்திரா பொன்னி ரக நெலை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் விளைச்சல் தரும் தருவாயில் உள்ள நிலையில், நெல் வெடித்து மஞ்சள், கருப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் பூஞ்சை காளான் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒடசக்கரை பகுதி விவசாயிகள் கூறியதாவது:  தேவூர் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் தனிஷ்கா, அம்மன், நெல் ரகங்கள் பயிரிட்டனர். பயிர்கள் வளர்ந்து, விளைச்சல் தரும் தருவாயில் உள்ள நிலையில், தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த தொடர் மழையால், சில இடங்களில் நெல் பயிர்கள் சாய்ந்து சேதமானது. இந்நிலையில், பூஞ்சை காளான் தாக்குதலால், நெல் மணிகள் வெடித்து மஞ்சள், கருப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காணப்படுகிறது. இதனால் நெல் முழுவதும் மகசூல் இல்லாமலும், கருக்காய் நெல் கூட இல்லாமல் பாதிக்கப்பட்டது.  ஒரு ஏக்கருக்கு ₹20ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடை செய்யும் தருணத்தில் பூஞ்சைக்காளான் தாக்குதலால், நெல்மணிகள் இல்லாமல் வெறும் கருப்பு குப்பை போல் காணப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : villages ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை