வேலூர் : வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக ED விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
