பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

கடத்தூர், ஜன.26: கடத்தூர் அருகே போசிநாயக்கன்அள்ளியில், பழமை வாய்ந்த லட்சுமி நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று பால்குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் கலசத்தின் மீது கங்கை நீர் உள்பட 13 புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி, கடத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>