நீடாமங்கலத்தில் கோழி வளர்ப்பில் மேலாண் நடைமுறை குறித்த பயிற்சி

நீடாமங்கலம், ஜன.27: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நிக்ரா திட்டத்தின் கீழ் கீழப்பட்டு கிராமத்தில் கோழி வளர்த்தால் கோடி லாபம் என்ற மையக்கருத்தில் புறக்கடை கோழி வளர்ப்பில் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை நடைமுறைகள் பற்றிய கிராமப்புற பெண்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது. கீழப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சபாபதி, கோழி வளர்ப்பின் செயல்முறைகளும், அதன் பயன்கள் குறித்தும் பேசினர். தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுநர் முனைவர் ஜெகதீசன், நாட்டுக்கோழிகளை உருவாக்குவதன் மூலம், தரமான நாட்டுக்கோழிகளையும், அதிக லாபத்தினையும் பெறலாம் என்றார்.

Related Stories:

>