அரியலூரில் குடியரசு தினவிழா கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

அரியலூர், ஜன.27: அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரத்னா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்கவிட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் சிறந்த காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கம் 28 காவலர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய எஸ்பி, டிஆர்ஓ, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை), சுகாதாரத்துறை சார்ந்த 47 நபர்கள், வருவாய்த்துறை சார்ந்த 36 பேர், காவல்துறை சார்பில் 39 பேர், ஊரக வளர்ச்சி முகமை சார்ந்த 22 பேருக்கும், நிலஅளவைத்துறை சார்ந்த 21 பேர், நகராட்சியை சார்ந்த 15 நபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 168 நபர்களுக்கு என மொத்தம் 348 நபர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துகுமாரசாமி இல்லத்திற்கு சென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், எஸ்பி சீனிவாசன், டிஆர்ஓ ஜெய்னூலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஆர்டிஓ ஜோதி பூங்கோதை மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>