டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 27: கரூர் வாங்கப்பாளையம் அருகே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார் வரை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இரண்டு சக்கர வாகன பேரணி நடத்தும் வகையில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று வாங்கப்பாளையம் பகுதியில் ஒன்று சேர்ந்தனர். அந்த பகுதிக்கு வந்த வெங்கமேடு போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை என தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, எல்பிஎப் நிர்வாகி அண்ணாவேலு தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் கலைந்து சென்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டுள்ள விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்துக்கு மதிப்பளித்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>