×

ஏர்வாடி அருகே பைக் திருட்டு

களக்காடு, ஜன. 27:  ஏர்வாடி அருகே பொத்தையடியைச் சேர்ந்த ராமசாமி மகன் வேல்முருகன் (28). கான்டிராக்டரான இவரிடம் இரவலாக பைக்கை பெற்றிருந்த நண்பரான சீனிவாசகபுரத்தை சேர்ந்த முத்துலிங்கம் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு முன் பைக்கை  நிறுத்திசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது இரவில் மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Bike theft ,Ervadi ,
× RELATED ஏர்வாடி அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்