×

மெமு ரயில் இயக்கத்தில் தென் தமிழகம் புறக்கணிப்பு

நெல்லை, ஜன.27:  மெமு ரயில் இயக்கத்தில் தென் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக ஞானதிரவியம் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் - மதுரை மின் வழித்தடம் 2014ல் நிறைவடைந்து விட்டது. ஆனால் இதுவரை ஒரு மெமு ரயில் கூட தென் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. ஆனால் கேரளாவில் மின்வழித்தடம் அமைக்கப்படுவதற்கு முன்ேப மெமு ரயில் இயக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே நெல்லை தொகுதி மற்றும் தென் தமிழகம் இந்த வகையில் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது. ரயில்வே போர்டு 12 மெமு ரயில்களை தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கி இருக்கிறது. இதில் திருவனந்தபுரம் வழியாக அநகே மெமு ரயில்கள் இயக்கப்படப் போவதாக அறிந்தேன்.  எனவே நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய செக்டார்களில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்களை மாற்றி மெமு ரயில்களை இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், நெல்லை ரயில் வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு எம்பி தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...