சர்வதேச அளவில் நாட்டரசன்கோட்டை மாணவி சாதனை

சிவகங்கை, ஜன.27: கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டியில் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து நாட்டரசன்கோட்டை பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் கொரோனா காலத்தை பயனுள்ள வகையில் செயல்படுத்தும் விதமாக குயில்ட் இந்திய அறக்கட்டளை சார்பில் 2021ம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 288 பேர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேர் பங்கேற்றனர். இதில் இப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி பர்ஹானா நஸ்ரின் 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளிச் செயலர் நாகராஜன், பள்ளி முகவாண்மை உறுப்பினர் மீனா, தலைமையாசிரியை மகாலெட்சுமி, தையல் ஆசிரியை ராணி, மாணவியின் தந்தை அப்பாஸ்அலி, தாய் பரக்கத்நிஷா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர்.

Related Stories:

>