×

பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கி ரூ.5 ஆயிரம் வழிப்பறி

*தப்பமுயன்ற ரவுடிக்கு கையில் முறிவு

வடலூர் : வடலூர் அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தனவேல் மகன் மணிகண்டன்(34). இவர் வடலூர்-கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மணிகண்டன் பணியில் இருந்தபோது அங்கு வந்த கோட்டக்கரை வேல்முருகன் மகன் தமிழரசன்(29), பார்வதிபுரம் பாலகிருஷ்ணன் மகன் கோகுல் ராஜன்(32), நெத்தனாங்குப்பம் மணிகண்டன் மகன் ரமணன்(29), புவனகிரி மஞ்சக்கொல்லை வசந்த் ஆகிய 4 பேரும் பைக்கில் பெட்ரோல் பங்க் வந்து, அங்கு பைக்குகளுக்கு காற்று நிரப்ப வந்தனர்.

அப்போது கம்பரசர் வேலை செய்யாததால் அங்கிருந்து ஊழியரிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டினர். இதனை பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டன் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் மணிகண்டனை ஆபாசமாக திட்டி தாக்கி, அவரது பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

இது குறித்து மணிகண்டன் வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் வடலூர் அருகே உள்ள தென்குத்து ஐயனார் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடிய நபர்கள் 10 அடி மண் வெட்டிய பள்ளத்தில் கீழே விழுந்தனர்.

இதில் தமிழரசன், ரமணன் ஆகிய இரண்டு பேர் பிடிபட்டனர். 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் தமிழரசனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழரசன், ரமணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் தமிழரசன் மீது வடலூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர்மீது 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vadalur ,Tanavel ,Manikandan ,Aypettai ,Vadalur-Cuddalur road ,Mundinam Manikandan ,
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது