×

திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஜன.27: ஆரணி அருகே திமுக உள்ளாட்சி பிரதிநிதி தேசிய கொடி ஏற்ற அதிமுகவினர் தடுத்தனர். இதை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நேற்று நடந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாதரணி தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தையறிந்து அங்கு வந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான சம்பத் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து கடும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் ஷர்மிளா, ‘சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் என்ற முறையில் நீங்கள் தேசிய கொடியை ஏற்றினீர்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்து கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவிலும் என்னை ஏற்ற விடாமல் தடுத்தீர்கள். ற்போதும் இதேபோன்று தகராறு செய்வதா?’ என கேட்டார். அப்போது திமுக, அதிமுகவினரிடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேசிய கொடியை ஏற்ற, அதிமுகவினர் அனுமதிக்காமல் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய தகராறு 10 மணி வரை நீடித்தது. இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சியை தேசிய கொடி ஏற்ற வைத்தனர். இதனிடையே அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் ஆரணி-வேலூர் சாலையில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மறியல் கைவிட்டனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : DMK Women ,Panchayat ,President ,protests ,road blockade ,
× RELATED மேமணப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா