×

போலீசார் ரோந்து பணியை கண்காணிக்க `இ-பீட்’ ஆப்

மதுரை, ஜன. 27: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாநகர் போலீசாரின் ரோந்துப்பணிகளை கண்காணிக்க `இ-பீட்’ என்ற மொபைல் ஆப் மற்றும் புதிய ஒளிரும் விளக்குகள்  பொருத்திய 15 நான்கு சக்கர மற்றம் 27 இருசக்கர  ரோந்து வாகனங்களை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த இ-பீட் ஆப் மூலம் போலீசார் மேற்கொள்ளும் ரோந்துப்பணிகளை, இன்ஸ்பெக்டர்கள் திறம்பட கண்காணிக்க முடியும். மேலும், முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள், பூட்டிக்கிடக்கும் வீடுகளை கண்காணிக்கவும் இந்த ஆப் பயன்படுத்தப்படும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகர துணைக்கமிஷனர்கள் சிவபிரசாத் (சட்டம்-ஒழுங்கு), பழனிக்குமார் (குற்றப்பிரிவு), சுகுமாறன் (போக்குவரத்து), பாஸ்கரன் (தலைமையிடம்), சோமசுந்தரம் (ஆயுதப்படை), மாநகர நுண்ணறிவு பிரிவு உதவிக்கமிஷனர் சிவகுமார் மற்றும் அனைத்து உதவிக் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : police patrols ,
× RELATED குடியரசு விழாவை சீர்குலைக்க திட்டம்?...