×

மதுரையில் குடியரசு தினவிழா கோலாகலம்

மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் கமிஷனர்  விசாகன், தேசிய கொடியேற்றி சிறந்த பணியாளர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையொட்டி, மதுரை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள், கோவிட் 19 கொரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகள், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து பிரிவினையும்  சேர்ந்த 80 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை கமிஷனர் விசாகன் வழங்கினார். மேலும், மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா காலங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் வழங்குவதில் தன்னார்வலர்களாக பணியாற்றிய தனியார் நிறுவனத்தை சேர்ந்த  15 பேருக்கும், மாநகராட்சி பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்குவதில் தன்னார்வலர்களாக பணியாற்றிய கீதா கண்ணன், எட்வின்ஜாய் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கினார். விழாவில் நகரப்பொறியாளர் அரசு, துணை கமிஷனர் (பொ) ராஜேந்திரன், நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவிக்கமிஷனர்கள் சேகர், பிரேம்குமார், மணியன், ஜெயராமராஜா, சுரேஷ்குமார், கல்வி அலுவலர் விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

கட்சி அலுவலகங்களில் குடியரசு தினவிழா
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில்,  மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் கொடியேற்றினார். மாநில  பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, ராஜாஹசன், போஸ், நிர்வாகிகள் பாலு,  முருகன், பால்ராஜ், மகிளா காங்கிரஸ் ஷாநவாஸ் பேகம், மரியம் வினோலா,  நளினி, தனலட்சுமி உள்பட பலர் கலந்து ெகாண்டனர். மாநகர் மாவட்ட  காங்கிரஸ் சார்பில் யானைக்கல், பழங்காநத்தம், செல்லூர், கே.புதூர்,  ஆண்டாள்புரம், விளாங்குடி, பெருங்குடி உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில்  மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார். தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கம் சார்பில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.  சங்கத்தலைவர் ஜெகதீசன், தேசிய கொடியேற்றினார். மதுரை மேற்கு தாலுகாவில் தாசில்தார்   பாண்டி கொடியேற்றினார். இதில் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார்   விஜயலெட்சுமி, துணை தாசில்தார் தாணுமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ்,   கிராம நிர்வாக அலுவலர்கள் ஜலபதி, மூர்த்தி, லோகம்மாள், முத்துக்கருப்பன்   மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கூடல்புதூர் குடியிருப்போர்  நலச்சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற  எஸ்.பி.மோகன் துரைசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் கண்ணன், சின்னச்சாமி, பாலகிருஷ்ணன், பாலு, பாபுஜி, சுரேஷ்  கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை தலைமை அஞ்சலகத்தில்,  குடியரசு தினவிழாவை முன்னிட்டு, முதுநிலை அஞ்சலக அதிகாரி நாகநாதன், தேசிய  கொடியேற்றினார். இதில், ஊழியர்கள் பங்கேற்றனர். குழந்தைகள்  நலக்குழு சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் மதுரை அன்னை சத்திய அரசு  காப்பக சிறுமிகள் இல்லத்தில் குடியரசு தினவிழாவில் பங்கேற்று கொடியேற்றி,  பரிசுகள் வழங்கினர். குடியரசு தினவிழாவில் கலெக்டர் அன்பழகன்,  குழந்தைகள் நலக்குழு சேர்மன் டாக்டர் விஜயசரவணனுக்கு ‘சிறந்த பணிக்கான  விருது’ பாராட்டுச்சான்று வழங்கி கவுரவித்தார். அவருக்கு காப்பக சிறுமிகள்  இல்லத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்  சண்முகம் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். இதில் பணியாளர்கள், குழந்தைகள்,  கண்காணிப்பாளர் தைலம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

149 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, மாவட்ட கூடுதல் கலெக்டர்  பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக  உதவியாளர் ராஜசேகரன், விமான நிலைய அதிகாரி செந்தில் வளவன், டீன் சங்குமணி,  ஆர்டிஓக்கள் முருகானந்தம், ரமேஷ், ராஜ்குமார், சவுந்தர்யா, துணை  கலெக்டர்கள் விஜயா, புஷ்பலதா, தாசில்தார்கள் பாண்டி, சிவபாலன், ராஜேந்திரன்  உள்ளிட்ட 263 அலுவலருக்கு விருதுகளையும், கேடயத்தையும், காவல்துறையில்  சிறப்பாக பணியாற்றிய 149 போலீசாருக்கு முதல்வருக்கான பதக்கங்களையும்,   கலெக்டர் வழங்கினார். பின்னர் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை,  மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 96  பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.முருகன்,  மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி ராஜேந்திரன் உள்பட  அரசுத்துறை அலுவலர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று  காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Tags : Republic Day ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...