சென்னை: கள்ளக்காதலியின் குழந்தை மருத்துவமனையில் இறந்த துக்கத்திக்கு வந்த போது ரவுடியை அவரது நண்பர்களே வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக கள்ளக்காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் 4வது ெதருவை சேர்ந்தவர் ஆதி(20). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆதிக்கு ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த சுசித்ரா(21) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சுசித்ராவுக்கு கடந்த டிசம்பர் 18ம் தேதி குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று குழந்தை இறந்தது. இதுகுறித்து சுசித்ரா தனது கள்ளக்காதலனான ரவுடி ஆதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்து தனது கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சுசித்ராவின் உறவுக்கார பெண் வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு ெதருவை சேர்ந்த சாருமதி(23) ஆகியோரிடம் வந்து பேசியுள்ளார். பிறகு வெகு நேரம் ஆனதால், சுசித்ரா இரவு நேரத்தில் எங்கும் போக வேண்டாம். எங்களுடன் தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதை நம்பி ரவுடி ஆதி, தனது கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சாருமதியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள நியூ லேபர் வார்டு முன்பு தூங்கியுள்ளார். ஆதி சற்று மது போதையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து சுசித்ரா மற்றும் சாருமதி உடன் தூங்கி கொண்டிருந்த ரவுடி ஆதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ரவுடி ஆதி துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பு வைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையான ஆதியின் கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சாருமதியை பிடித்து விசாரணை நடத்திய போது, ஆதியை மருத்துவமனைக்கு அழைத்தப்படி, சுசித்ரா, சூர்யா(20), அலிபாய்(20), கார்த்திக்(21) ஆகியோருக்கு போன் செய்து ஆதி மருத்துவமனைக்கு வந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி 3 பேரும் தனது நண்பர்களுடன் வந்து ரவுடி ஆதியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் தற்போது தலைமறைவாக உள்ள சூர்யா, அலிபாய், கார்த்திக் ஆகியோர் ஆதியின் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இணைந்து கொலை ெசய்துள்ளனர். அதேநேரம் சூர்யாவின் நண்பர் ஒருவரை ஆதி சில மாதங்களுக்கு முன்பு வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்காதலியான சுசித்ரா உதவியுடன் சூர்யா தரப்பு ரவுடி ஆதியை வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது.இதையடுத்து, போலீசார் தலைமறைவாக உள்ள சூர்யா உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
