திமுக வார்டு சபை கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்  பேரூர் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.  14வது வார்டில் உள்ள ரவுண்ட் பங்களா தெருவில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர், எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசும்போது  “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகள் குறித்து விளக்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும்” என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், பேரூர் நிர்வாகிகள் செம்பியன், சின்ராஜ், அரிகிருஷ்ணன், பாஸ்கர், பாபு, சச்சிதாஸ்,பழனி, வாசன், சுகுமார் உட்பட ஒன்றிய, மாவட்ட, பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>