செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சிபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மாற்றுக்கட்சியினர் 2500 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இப்பெல்லாம் கட்சி ஆரம்பிக்கும்போதே நாற்காலியை செய்து விடுகிறார்கள். கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு நாளைய முதல்வரே என்று சமூக வலைதளங்களில் வலம் வருவதை நாம் பார்க்கிறோம்.
திமுக அப்படி அல்ல, தமிழர்கள் வளர்ச்சி பெற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வறுமைக்கோட்டில் வாடிக்கொண்டிருக்கின்ற சமுதாயம், தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கையிலே மேலோங்கி நிற்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மக்களுக்கான திட்டங்கள் தீட்டப்படுகிறது. திமுகதான் தமிழகத்தின் தாய் கழகம். தாய் கழகமான திமுகவில் இணைந்தவர்களை அன்போடு வரவேற்கிறேன் என்றார்.
