நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கம் வலியுறுத்தல் மாணவர்கள் நலன் கருதி அவரவர் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்

மன்னார்குடி, ஜன. 26: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன்கருதி அவரவர் படிக்கின்ற பள்ளியிலே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை: கொரொனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் 9 மாதங்களுக்கு பிறகு பொதுத்தேர்வை எழுதவுள்ள 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரிடை பயிற்சி அவசியம் என்பதையறிந்து தமிழக அரசு கடந்த 19ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது த் தேர்வு நடத்துவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தேர்வு எண் ஒதுக்குவதற்கான நடவடிக்கை மாணவர்களின் பட்டியல் தேர்வுத்துறையால் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடி க்கையால் கல்விச் செயல் பாடுகளின் பாதிப்பை அறிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினா வங்கி புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைககள் அரசு மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையத்தில் 4 பள்ளிகளுக்கு (அரசு,அரசுஉதவிபெறும்பள்ளி,மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள்) பல்வேறு இடங்களிலிருந்து ஒரே தேர்வு மையத்திற்கு வருவதால் தேர்வு அறைக்குள் செல்லும்போதும், தேர்வு முடிந்து வெளியே வரும்போதும் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிரமம் ஏற்படும். அதனால் நான்கு பள்ளிகள் பாதிக்கும்.மேலும் கிராமப் புற ங்களில் 7 கிலோ மீட்டரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளியிலிருந்து தேர்வு மையம் அமைந்துள்ளதால் கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து சிரமங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு கொரோனா பெருந் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் மாணவர்களின் நலன்கருதியும் அவரவர் படிக்கின்ற பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வுமையங்களாக மாற்றியமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>