கரூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கரூரில் அளித்த பேட்டி: வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனி கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன். அதனால் மற்ற கட்சியை பற்றி பேசுவதில்லை. எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உரிய அங்கீகாரத்தை முதல்வர், தேர்தலில் எங்களுக்கு தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜனநாயகன் வெளி வந்தாலும், வரவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. இதனால் என் வீட்டில் சோறு பொங்க போகுதா? நீங்கள் விரும்பிய கதாநாயகனின் கட்அவுட்களுக்கு ஆயிரம் லிட்டர் பாலை ஊற்றி வீண் செய்கிறீர்கள். அந்த பாலை கொண்டு போய் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
