×

பொதுமக்கள் வலியுறுத்தல் தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்

தஞ்சை,ஜன.26: தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை கல்லணை கால்வாயில் கரையோரம் உள்ள மக்கள், பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் ஆற்றின் நீர் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசியது. மேலும், தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கல்லணை கால்வாயில் நீராடுவார்கள். இதே போல் பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழிக்கும் தண்ணீர் செல்லும். ஆனால் கழிவு நீருடன் தண்ணீர் சென்றால், பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பி–்ல், ரூ.8 லட்சம் மதிப்பில் கர்நாடகா மாநிலத்திலிருந்து குப்பைகளை தேக்கும் வலையை, தஞ்சை சிவாஜி நகர் பகுதியிலுள்ள கல்லணை கால்வாய் ஆற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதில் தேங்கும் குப்பைகளை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக போதுமான பராமரிப்பு இல்லாததால், குப்பைகளை, கழிவு பொருட்கள் தேங்கியது. இதனால் அப்பகுதி அமைக்கப்பட்ட வலை, ஒரு புறமாக இழுத்து கொண்டது. மேலும், தேங்கிய குப்பைகளை பல மாதங்களாக அகற்றாததால், அதில் செடி கொடிகள் மண்டியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இது குறித்து பலமுறை அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. கல்லணை கால்வாய் ஆற்றில் நீராடுபவர்கள், அகழிக்கு செல்லும் தண்ணீர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், மாவட்ட நிர்வாகம், ரூ.8 லட்சம் மதிப்பில் குப்பையை தேக்கும் வலையை ஆற்றில் அமைத்தார்கள். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாததால், செலவு செய்த தொகையான ரூ. 8 லட்சம் வீணாகி விட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக தஞ்சை, சிவாஜி நகர், கல்லணை கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குப்பையை தேக்கும் வலையை சீர் செய்து, சுகாதாரமான தண்ணீர் விடவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fort canal ,Tanjore ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...