பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

தஞ்சை, ஜன.26: தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே செல்வியம்மாள் நகரை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மனைவி சோபியா ஆலிபர்(29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மன்னார்குடிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சோபியா ஆலிபர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை, லேப் டாப், செல்போன், 700 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சோபியா ஆலிபர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, லேப் டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>