×

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பினர் இருசக்கர வாகன பேரணி

புதுக்கோட்டை,ஜன.26: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பினர் இரு சக்கர வாகன பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் போராடும் விவசாயிகளின் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மின்சார திருத்த சட்டம் 2020 வாபஸ் வாங்கனும். தொழிலாளர் நல திருத்த சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும். மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். புதுக்கோட்டை மச்சுவாடியிலிருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி நடத்தியதோடு புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மத்திய அரசு உடனடியாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டெல்லியில் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலமைவகித்தார். ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் மாநில பொதுச்செயலாளர் விடுதலைகுமரன் முடித்துவைத்தார். இதில் பலர் கலந்துகொண்டனர்.

Tags : rally ,Leninist People's Liberation Organization ,
× RELATED அர்ஜெண்டினாவில்...