×

விவசாயிகள் பேரணியை தடுக்க போலீசார் ஒத்திகை பெரம்பலூரில் தத்ரூபமாக நடந்தது

பெரம்பலூர், ஜன.26: பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்க, தொழிற்சங்க வாகன பேரணியை ஒடுக்க போலீசார் ஒத்திகை நடத்தினர். தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பில் 1லட் சம் டிராக்டர்கள் பங்கேற் கும் பிரமாண்ட பேரணியை ஆதரித்தும், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் உறுதி மொழி ஏற்கும் விதமாக பெரம்பலூரில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், ஆட் டோக்கள் தேசியக் கொடியுடன் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி, போலீசாரின் தடையைமீறி பழைய நகராட்சி அலுவலகம் அருகே மேற்கு வானொலி திடலில் இருந்து நடக்கும் என அனைத்து விவசாயிகள் சங்கங்கள், அனைத்துத் தொழிற்சங் கங்கள், அனைத்துக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 26ம்தேதி எவ்வித பேரணிகளையும் பெரம்பலூரில் நடத்த அனுமதிக் கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் வகையில் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீஸ் உத்தரவை மீறி பேரணி நடத்தி னால் மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பேரணிக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போலீசாரின் தடையைமீறி நடக்கும் வாகன பேரணியை தடுத்து நிறுத்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், பெர ம்பலூர் டிஎஸ்பி (சட்டம் ஒழுங்கு) சரவணன், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், (ஹை வே-டிராபிக்) கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், மனோஜ் மற்றும் 50க் கும் மேற்பட்ட போலீசார் வாகனப் பேரணி தொடங்கும் என போராட்டக்குழு அறிவித்துள்ள மேற்கு வானொலித் திடலில் குவிக்கப் பட்டு, வாகனப் பேரணியை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Tags : rehearsal ,
× RELATED திண்டுக்கல்லில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை