மயானமேடை அமைத்து தர வேண்டும் கலெக்டரிடம் விசி கட்சியினர் கோரிக்கை

கரூர், ஜன. 26: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மயான மேடை அமைத்து தரக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவக்குளம், பழைய ஜெயங்கொண்டம், கடவூர் ஒன்றியம் ராஜலிங்கபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் இருந்த தகரக் கொட்டகை சேதமடைந்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால் ஈமச்சடங்கு உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதில் சிரமம் உள்ளது. எனவே, இந்த பகுதிக்கு சிமெண்ட்டால் ஆன மயான மேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>