அம்பை: நீர்வரத்து சீரானதால் 5 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதியளித்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுதலாதலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்று. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் விழுவதால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜன.2ம் தேதி இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென தொடர் மழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தது. இந்நிலையில் அருவியில் நீர்வரத்து சீரானதால் 5 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
