×

பிப்ரவரி 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் : அட்டவணையை இறுதி செய்த ஒன்றிய அரசு!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி கூடுகிறது. அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒன்றிய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் 2026– 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அன்றைய தினம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ம் தேதி தொடங்கும் என்றும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.28-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முப்படைகள், மீண்டும் படைக்குத் திரும்பும் பீட்டிங் ரீட்ரீட் விழா ஜன.29-ம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது. ஜன.30-ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஜன. 31 அன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடாது. ஒன்றிய பட்ஜெட் பிப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.குடியரசுத் தலைவரின் உரை மற்றும் ஒன்றிய பட்ஜெட் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிறகு பிப். 13 அன்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். ஏறக்குறைய ஒரு மாத கால ஒத்திவைப்புக்குப் பிறகு மார்ச் 9-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். கூட்டத்தொடர் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடையும்.

Tags : Union Budget ,EU Government ,Delhi ,Parliamentary Budget Meeting ,EU ,
× RELATED ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை...