×

குளித்தலை நகர திமுக அவைத்தலைவர் வக்கீல் சாகுல்அமீது இல்ல திருமணம் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வாழ்த்து

குளித்தலை, ஜன. 26: கரூர் மாவட்டம் குளித்தலை நகர திமுக அவைத் தலைவரும் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளருமான வக்கீல் சாகுல் அமீது இல்ல திருமண விழா குளித்தலை அண்ணா சமுதாயம் மன்றத்தில் நடைபெற்றது.விழாவிற்கு தலைமை வகித்த திமுக மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் ரகுமான் சேட் -நிஷா ஆகியோரை வாழ்த்தினார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார் இதில் எம்எல்ஏ ராமர் .திமுக சட்டத்துறை செயலாளர் வக்கீல் மணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் உமாபதி சந்திரன், அண்ணாதுரை, நகர்மன்றத் துணைத் தலைவர் ஜபருல்லா, தொகுதி பொறுப்பாளர் விபி சேகர், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் சர்புதீன், மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வக்கீல் சங்க நிர்வாகிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் நகர அவைத்தலைவர் வக்கீல் சாகுல் அமீது நன்றி கூறினார் .

Tags : Senthilpalaji ,District Officer ,lawyer ,Kulithalai ,Sakul ,DMK ,
× RELATED அஸ்தினாபுரம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்