×

படித்து 3 ஆண்டுகளாகியும் லேப்டாப் இன்னும் வழங்கல மாணவ, மாணவியர்கள் புகார்

விருதுநகர், ஜன.26: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. தமிழக அரசு 2017-18ல் பிளஸ்2 படித்து மாணவ, மாணவியருக்கு இன்று வரை லேப்டாப் வழங்கவில்லை. 2017-18ல் படித்து மாணவ, மாணவியர் தற்போது கல்லூரிகளில் படிப்பை முடிக்க உள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் லேப்டாப் வழங்க கோரி கலெக்டர் அலுவலகங்களில் மனு அளித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி அரசு கலைக்கல்தூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: ஆலங்குளம், உப்புத்தூர், ஊராம்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, நென்மேனி, நல்லி, படந்தால் உள்ளிட்ட மாவட்டத்தின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18ல் பிளஸ்2  படித்தவர்களுக்கு மட்டும் அரசு லேப்டாப் வழங்கவில்லை. பிளஸ் 2 படித்து 3 ஆண்டுகளாகி விட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து உடனே லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Student ,
× RELATED விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி...