×

அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆண்டிபட்டி, ஜன.26: ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துமனையில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் எழிலரசன் மற்றும் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் முதலாம் ஆண்டு சோர்ந்துள்ள 100 மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.வெளி மாநிலத்தில் இருந்து 15 மாணவர்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 79 மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு படிப்பதற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் கல்லூரி முதல்வர் இளங்கோவன் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 25 பழைய அரசு மருத்துவக்கல்லூரிகளும் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. இவைகளில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தான் முதன் முதன் முதலில் உடற்கூறியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. (ஜசிஎம்ஆர்) மத்திய சுகாதார அமைச்சகம் தமிழகத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தான் முதன் முதலில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டது.

அதிகளவு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது தேனி மாவட்டம் தான். அதிலும் அதிகளவு உயிர்கள் இறக்கவில்லை. அந்த அளவுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை விளங்கி வருகிறது. மேலும் சுத்தமான மருத்துவமனையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு மத்திய அரசு பிளாட்டினம் விருது வழங்கியது. மேலும் தமிழகத்தில் 7 மருத்துவமனையில் தான் தாய்பால் வங்கி உள்ளது. அதில் நமது மருத்துவமனையில் தான் அதிகளவு தாய்பால் சேகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நமது மருத்துவமனையில் தான் அதிகளவு டயாலிசஸ் சிகிச்சையும், 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவமும் பார்க்கப்பட்டது என்றார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Government Medical College ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...