×

காளையார்கோவிலில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை, ஜன.26:  காளையார்கோவிலில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் திமுக மாநில மகளிரணி அமைப்பாளர் கனிமொழி எம்பி விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காளையார்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலவிளாம்பட்டி மற்றும் கொல்லங்குடியில் கனிமொழி எம்பி திமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்எம்.கென்னடி, முத்தூர் கிளை செயலாளர் ஆர்எம்.கருப்பையா, நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் ஜெயராமன், இளைஞரணி அமைப்பாளர் மோகன்ராஜ் கலந்துகொண்டனர். காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.

இதில் ஆர்எம்எல்.மணி, பொறுப்புக்குழு உறுப்பினர்(வ) முருகானந்தம், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் விஎஸ்எம்.ஸ்டீபன், தொழில்நுட்ப அணி நெப்போலியன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணதாசன், காளீஸ்வரன், முருகேசன், சாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியராஜன், மாரிமுத்து, ஆரோக்கியஜெனிபர்குரூஸ், ஊராட்சி செயலாளர் ஆசைத்தம்பி, ஏஎஸ்.ஆரோக்கியம், நகர் திமுக ஜான்பீட்டர், அஜீத்குமார், குபேந்திரன்,
திமுக இளைஞரணி ஜான்சந்தியாகு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சக்திவேல், சரவணன், கிளைக்கழக திமுக கஸ்பார், குவைத் பண்பாட்டுக்கழகம் போஸ், திமுக மாணவரணி சதாம், வழக்கறிஞர் சதீஸ், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ஜஸ்டின்திரவியம், முத்து, அருள்செல்விஅரசு, ராஜ்குமார், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி கண்ணன், நகர் அவைத்தலைவர் பாஸ்கரன், வின் பைனான்ஸ் ஜோசப், பாரத் பெட்ரோலியம் ஜோசப், முன்னாள் ஒன்றிய தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்டீபன், கிளை செயலாளர்கள் அரங்கநாதன், ஆரோக்கியஜேசுராஜா, ராமையா, நாச்சியப்பன், தேரடியான், அரசு, குப்பமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காளையார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறவமங்கலத்தில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் யோக.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செல்லையா, அக்கினிச்சாமி, சமயத்துரை, தோக்கப்பன், வரதராஜன், மனோகரன், வெங்கடேஷ், முகமதுசக்கரியா, வேல்முருகன், சி.ரமேஷ், ஜோதிராமலிங்கம், வெள்ளைச்சாமி, கருணாநிதி, பாண்டிக்கண்ணன், சாத்தையா, பெரியண்ணன், தர்மநாதன், சித்திரைவேலு, திருவண்ணாமலை, கோதண்டராமன், ஐயப்பன், நவநீதகிருஷ்ணன், ரமேஷ்(எ)சொக்கு, செந்தில்குமார், வீரையா, பிரபு, பாண்டி, ஆறுமுகம், மலைச்செல்வம், குமார், ஏ.ரமேஷ், வீரையா, காந்தி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : village council meeting ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு