×

லோடுமேனுக்கு பீர்பாட்டில் அடி

சிவகாசி, ஜன.9: சிவகாசி அருகே லோடுமேனை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே பெத்துலுப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(43). இவர் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் முத்துராஜ் என்பவரும் நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் மது அருந்தி உள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த குட்டி, சனி, மனோ ஆகியோர் சுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சுந்தரமூர்த்தி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரமூர்த்தியை தாக்கிய 3 பேரை தேடி வருகின்றனர்.

 

Tags : Loadman ,Sivakasi ,Sundaramoorthy ,Pethulupatti ,Muthuraj ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...