×

ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

சிங்கம்புணரி, ஜன.26:  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார கிளை தேர்தல்  வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்களாக முத்துமாரியப்பன், ஜெயராமன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் வட்டார தலைவராக லதா, செயலாளராக சுரேஷ், பொருளாளராக ஞான விநாயகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக ஆரோக்கிய செல்வராஜ், வைரம், ராகவன், துணைத் தலைவர்களாக கலைமதி, செல்வி, சரவணன், துணைச் செயலாளர்களாக சித்ராதேவி, அஜ்மீர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 18 பேர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். வட்டாரக்கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாணவர்கள் நலன் கருதி ஆரம்ப நடுநிலைப்பள்ளி வகுப்புகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Teacher Alliance Administrators ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ