பள்ளிக்கு விளையாட்டு உபகரணம்

சாயல்குடி, ஜன.26:  முதுகுளத்தூரில்  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் நேதாஜி கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை தலைவர் மயில்வாகணன் தலைமை வகித்தார். ஜெ.பேரவை செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பூமிநாதன் வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துராமலிங்கம், ஆசிரியர்கள் மங்களநாதன், திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>