ஜெயலலிதா நினைவிடம் செல்ல பரமக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

பரமக்குடி, ஜன.26: சென்னையில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். அதில் கலந்து கொள்வது குறித்து, பரமக்குடியில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்பி நிறைகுளத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், சென்னை விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலையில், மாநில தேமுதிக மகளிர் அணி துணைச் செயலாளர் ஜான்சி ராணி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், ஆணிமுத்து, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சரவணன், செயலாளர் குப்புசாமி, நாகநாதன், பார்த்திபனூர் நகர செயலாளர் வினோத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>