பழநி, ஜன. 26: பழநி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தன.
இதன்பேரில் நகராட்சி ஆணையர் லட்சுமணன் தலைமையில் நகர் நல அலுவலர் (பொ) வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் நேற்று பழநி நகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனை, பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் என சுமார் 1000 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், 1000 கிலோ காலாவதியான அல்வா, 2000 கிலோ காலாவதியான பேரீச்சம் பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென்றும், சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.