அரசு மேல் நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

உடுமலை, ஜன. 26:உடுமலையை அடுத்துள்ள பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார் பொருளியல் ஆசிரியை  தேவிகா வரவேற்றார் என்எஸ்எஸ் அலுவலர் சரவணன் தேசிய வாக்காளர் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் பற்றியும் பேசினார். தொடர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வாசிக்க, மாணவ மாணவிகளும் இருபால் ஆசிரியப் பெருமக்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.முடிவில் ஆங்கில ஆசிரியர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>