சென்னை: தமிழ்நாட்டில் பாஜக எங்கே பரப்புரை தொடங்கினாலும் எந்த வித பயனுமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பாஜக தரும் வெற்று, அலங்கார வார்த்தைகளுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டிற்கு நிதியை தரவில்லை; ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பாஜக பிரிவினையை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
