×

தைப்பூசத்தையொட்டி பழனிக்கு சிறப்பு பஸ்

பொள்ளாச்சி, ஜன. 26: பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு, தைப்பூசத்தையொட்டி 3 நாட்கள் பழனிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம்  பழனியில் நடக்கும் தைப்பூச திருவிழாவையொட்டி, அங்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை 27ம் தேதி மற்றும் 28, 29ம் தேதிகளில் பழனிக்கு பொள்ளாச்சியில் உள்ள 4 பணி மனைகளிலிருந்தும் கூடுதலாக 25 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது