×

உறைபனியால் குன்னூரில் கடும் குளிர்

குன்னூர்,ஜன.26: நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக  நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனிப்பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில் தேயிலை செடிகள், புல்வெளிகள், செடிகொடிகள் கருகும்,கடும் குளிர் நிலவும் வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாக செல்லும். இந்நிலையில் இந்தாண்டு  நீர்பனிப்பொழிவு அதிகமாக  இருந்தது. இதனால் உறை பனி தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஜனவரி மாதத்தில் கடும் மேக மூட்டத்துடன் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று உறைபனியின் தாக்கம் சற்று அதிகாமாக காணப்பட்டது. ஊட்டி,குன்னூர்,கேத்தி பள்ளத்தாக்கு,குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. மேலும் பனியின் தாக்கத்தால் வீடுகளில் பயன்பாட்டிற்கு வைக்கப்படிருந்த தண்ணீர் உறைந்து காணப்பட்டது. இதனால், தேயிலை தோட்டங்கள்,விளை நிலங்கள்,புல்வெளிகள் போன்றவை  வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. உறைபனியுடன் குளிர் காற்று வீசியதால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தோட்டத் தொழிலாளர்ளும் பணிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...