தேசிய வாக்காளர் தின விழா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்

ஊட்டி, ஜன. 26: வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் கலந்துக் கொண்டு விழாவில், 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கலக்டர் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பது தங்களது உரிமை என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.  வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பதை ஜனநாயகத்தில் மிக பொpய குற்றமாகும். ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது. 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் நாளன்று தங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையானது வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அளிக்கப்படுகிறது. இதனை தவறாமல் பயன்படுத்தி கொண்டு வாக்களிக்க வேண்டும். மேலும், தங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை குறித்து நன்றாக தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலினி பேரில் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் ஏற்கனவே 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது இது அதிகரிக்கப்பட்டு 903 வாக்குசாவடிகளாக உள்ளது.

தேசிய வாக்காளர் தினத்தில் ஒவ்வொரு வாக்காளர்களும் ஓட்டுக்கு நோட்டு வாங்க மாட்டேன் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, குன்னூர் சப்.லெக்டர் ரஞ்சித்து சிங், ஊட்டி சப்.கலெக்டர் மோனிகா, மகளிர் திட்ட அலுவலர் பாப உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>