ஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா

ஈரோடு, ஜன. 26: ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் ஆண்டு விழாவையொட்டி செயின் மற்றும் வளையல் திருவிழா சிறப்பு சலுகையுடன் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி ஜோயாலுக்காஸ் ஷோரூமில் நேற்று நடந்தது. நிறுவனத்தின் மண்டல பொதுமேலாளர் (ரீடைல்) பி.டி.பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அக்னி ஸ்டீல்ஸ் உரிமையாளர் சின்னச்சாமி, ஆர்.பி.பி. நிர்வாக இயக்குநர் செல்வசுந்தரம், சிட்டி மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அப்துல் ஹசன், லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் தாத்ரேயன், ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, சிறப்பு சலுகை விற்பனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

   இது குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளதாவது: ஜோய் ஆலுக்காஸ் ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய செயின் மற்றும் வளையல் திருவிழாவை நடத்துகிறோம். இதில், விதவிதமான வளையல்கள், செயின்கள் வெறும் 5சதவீத சேதாரத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 30 சதவீத தள்ளுபடி, வைரங்களுக்கு காரட் ஒன்றுக்கு 20 சதவீத தள்ளுபடி, ஓல்டு கோல்டு எக்ஸ்சேஞ்ச்கு ஜீரோ சதவீத கழிவு, வெள்ளி கொலுசுகள் மற்றும் மெட்டிகளுக்கு செய்கூலி இல்லை. வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பர்சேஸ்களுக்கும் ஆச்சர்யமூட்டும் வகையில் நிச்சய பரிசுகள், திருமண வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளோம். நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ரூ.72 தள்ளுபடியையும் அறிவித்துள்ளோம்.

நீங்கள் இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி நகை வாங்கும்போது ஒரு வருட இலவச இன்சூரன்ஸ், ஆயுட்கால இலவச பராமரிப்பு, பை-பேக் கியாரண்டி, பழைய தங்க நகைகளுக்கு கேஷ்-பேக் ஆகிய சலுகைகளும் வழங்க உள்ளோம். ஈரோடு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவே இந்த சலுகைகளை ஆண்டு விழாவையொட்டி வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: