×

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்

கோபி, ஜன. 26: அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: எங்கள் மீது குறை கூறுவதை வரவேற்கிறோம். அப்போதுதான் தவறுகளை சரி செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் எங்கள் மீது குற்றம் சொல்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். தற்போது வர உள்ள தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சர்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவை இல்லை, இருமொழி கொள்கையே போதும் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானத்தை இயற்றி உள்ளார். அரசை குறை கூறுபவர்கள் நேரடியாக கூற வேண்டும். பள்ளி கல்வித்துறையில் ஊழல் என்கின்றனர். ஐ.சி.டி திட்டத்தில் ரூ.528 கோடி மதிப்பீட்டில் உள்ள பணிகளுக்கு 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படும் என்றும், 40 சதவீத தொகையை ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றுதான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் ஊழல் எப்படி வரும்? ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Tags : election manifesto ,AIADMK ,opposition ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...