×

நாகர்கோவிலில் நீதிமன்றம் அருகே டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து

நாகர்கோவில், ஜன.26: நாகர்கோவில்  நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள முத்தமிழ் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கண்டு அச்சம் அடைந்தனர்.  நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மின் இணைப்பு துண்டித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பத்தால் நாகர்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுவே இரவில் நிகழ்ந்து இருந்தால் பல டிரான்ஸ்பார்மர் வெடித்து இருக்கலாம் என பொதுமக்கள் கூறினர்.

Tags : fire ,transformer ,Nagercoil ,court ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா