நாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்

நாமக்கல், ஜன.26: நாமக்கல் அருகே பெருமாம்பாளையத்தில், அதிமுகவில் இருந்து விலகிய 300 பேர், மாவட்ட பொறுப்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாமக்கல்லை அடுத்த கீழ்சாத்தம்பூர் ஊராட்சி பெருமாம்பாளையத்தில், 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணையும் விழா ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தமிழரசு வரவேற்றார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் முன்னிலையில், அதிமுக கிளை செயலாளர்கள் குருசாமி, வேலன், ராஜூ ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ராஜேஸ்குமார் வரவேற்று பேசுகையில், ‘தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை. மக்களுக்கு செய்ய வேண்டியதை அதிமுக ஆட்சி செய்ய தவறிவிட்டது. மக்கள் கஷ்டப்படும் காலங்களில் அதிமுக அரசு உதவவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏழை, எளிய மக்களின் குறைகள் தீர்க்கப்படும்,’ என்றார். கூட்டத்தில், அவைத் தலைவர் மணி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், நலங்கிள்ளி, மாவட்ட இளைஞர்அணி துணைஅமைப்பாளர் இளம்பரிதி,  நெப்போலியன், நர்மதா, செல்லப்பன் செல்வராஜ், கண்ணகி, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories:

>