×

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை

நாமக்கல், ஜன.26: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்கவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில், தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் கொண்டு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை கட்டாயம் சேர்க்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வயது நிரம்பிய 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் பேர் மட்டும் தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 30 ஆயிரம் பேரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கவேண்டும் என்றார்.

 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேடயங்களை கலெக்டர் மெகராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார், தாசில்தார் சுப்பிரமணி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal district ,
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்