கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, ஜன.26: காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிரசன்ன பார்வதி சமேத நகரேஸ்வர சுவாமி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு பிரசன்ன பார்வதி சமேத நகரேஸ்வர சுவாமி, கன்னிகாபரமேஸ்வரி மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், ஆலய கமிட்டியினர், சமாஜ கமிட்டியார் மற்றும் ஆர்ய வைஸ்ய குலத்தினர் செய்திருந்தனர்.

Related Stories:

>