×

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி பாரதியார் நகர் பொதுமக்கள், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரிதேவி கோவிந்தராஜிடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற அவர், கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் காய்வாயை சீரமைத்து கழிவுநீரை வெளியேற்றினார். இதையடுத்து, பாரதிநகர் ஊர் பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ், துணைத்தலைவர் செல்விபாஸ்கர், வார்டு உறுப்பினர்கள் முனிரத்தினம், விஷ்ணுவரதன் மற்றும் டேங்க் ஆபரேட்டர் ராஜா, ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர். 

Tags : Sewage Canal Rehabilitation Panch. ,
× RELATED தளி அருகே மூதாட்டி மாயம்