பாளையில் தம்ரோ பர்னிச்சர் புதிய ஷோரூம் திறப்பு விழா

நெல்லை, ஜன. 26: பாளையில் தம்ரோ பர்னிச்சர் புதிய ஷோரூம் திறப்பு விழா, நாளை (27ம் தேதி) நடக்கிறது. பாளையில் திருச்செந்தூர் ரோட்டில், 15 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக தம்ரோ பர்னிச்சர் ஷோரூம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, நாளை (27ம் தேதி) நடக்கிறது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், ஷோரூமை திறந்து வைக்கிறார். முதல் விற்பனையை டாக்டர் சாந்தசீலன் விக்டர் பெற்றுக் கொள்கிறார்.

தம்ரோ, தெற்காசியாவின் மிகப்பெரிய பர்னிச்சர் தயாரிப்பாளர். உலகளவில் 240க்கும் மேற்பட்ட தம்ரோ ஷோரூம்கள் உள்ளது. இந்தியாவில் 85க்கும் ஷோரூம்கள் உள்ளன. பாளையில் துவங்கப்பட்டுள்ள ஷோரூமில் தரமான பர்னிச்சர்கள், 50க்கும் மேற்பட்ட சோபா செட்டுகள், 20க்கும் மேற்பட்ட பெட்ரூம் செட்டுகள், 30க்கும் மேற்பட்ட டைனிங் டேபிள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆபீஸ் பர்னிச்சர் செட்டுகள் கண்ணை கவரும் டிசைன்களில் உள்ளது. துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை நடைபெறுகிறது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. திறப்பு விழா ஏற்பாடுகளை தம்ரோ மண்டல மேலாளர் கண்ணன், நெல்லை உரிமையாளர் என்.கே.விஸ்வநாதன் செய்து வருகின்றனர்.

Related Stories:

>