தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 2
மீடியம் சைஸ் தக்காளி 2
பெரிய பல் பூண்டு 4
புளி நெல்லிக்காய் அளவு
கல் உப்பு ருசிக்கு
சி. மிளகாய் 6
காஷ்மீரி மிளகாய் 3
தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
சி. மிளகாய் 3
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
ந.எண்ணெய் 3 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில், பூண்டு, புளி, காஷ்மீரி மிளகாய், சி.மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து, அரைக்கவும்.அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்ததும், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.வதக்கினதும், தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கி, மேலே, 1 ஸ்பூன் காய்ச்சாத ந.எண்ணெய், கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு நன்கு கலந்து பௌலுக்கு மாற்றவும்.இப்போது சுவையான கடப்பா காரச் சட்னி தயார்.
