தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி,ஜன.26: தூத்துக்குடி மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி  மாவட்டத்தில் ஒரு சிலர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 ஆர்/டபுள்யூ, 179 மற்றும் 207 ஆகிய பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>