150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த பார்வையற்ற, செவித்திறன் குறைந்த, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த பார்வையற்ற, செவித்திறன் குறைந்த, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் வேலூர் சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் நடந்தது. முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்த 18 மாற்றுத்திறனாளிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்கள் 150 பேருக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ பார்த்தீபன், ஆர்டிஓ கணேஷ், தாசில்தார் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>